முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்கள் வெளியில் மாஸ்க் இல்லாமல் செல்லலாம் – சி.டி.சி அறிவிப்பு
முழுமையாக தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்லலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் உகான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், அங்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தி, அமரிக்காவை மோசமாக தாக்கியது. பின்னர் கொரோனா பரவல் சிறிது குறைந்த நிலையில், அமெரிக்காவில் வேகமாக பரவியது. தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்காவில் இதுவரை 32,927,091 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 587,384 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 25,521,913 பேர் பதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அரசு தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்கள் (சி.டி.சி) கூறுகையில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த அமெரிக்காவில், இதுவரை 30% மக்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் பாதிப்பும், இறப்பும் பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கர்கள் உடற்பயிற்சி, உணவகங்களில் உணவு அருந்துதல் மற்றும் பெரிய கூட்டத்தில் இல்லாத நேரத்தில் வெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமல் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டுக்குள் இருக்க முடியும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பெரிய கூட்டங்கள், மால்கள், மதவழிபாட்டு தளங்களில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்கள், கடுமையான நோய்க்கு அதிக ஆபத்து உள்ளவர்களைச் சுற்றி கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இன்று நாம் இயல்பு நிலைக்கு ஒரு படி பின்வாங்கக்கூடிய மற்றொரு நாள், என்று சிடிசி தலைவரான ரோசெல் வலென்ஸ்கி கூறியுள்ளார். 7 நாட்களில் பாதிப்பு 21% என்பது உண்மையிலேயே நம்பிக்கையான சரிவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால், புதிய விதிகளின் கீழ், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் முகக்கவசம் இல்லாமல் ஒரு சிறிய வெளிப்புற கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது மற்றவர்களுடன் வெளிப்புற உணவகத்தில் உணவருந்தலாம், அவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால், செலுத்தாமல் இருந்தாலும் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.