தூத்துக்குடியில் நாளை முதல் 4 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 4 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு ஆலோசனையை வழங்கிவருகிறது, மேலும் தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 5.7.2020, 12.7.2020, 19.7.2020, 26.7.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழமை எந்த ஒரு தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மெடிக்கல், அவசர ஊர்தி மருத்துவ வசதிகளுக்கு தனியார் வாகனங்கள் இயக்கவும் அனுமதிக்கப்படுகிறது, மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கும் நாள் அதிகரித்து வருவதால் 4.7.2020 இரவு 12மணி முதல் 6.7.2020 இரவு 12 மணி வரை ஊரடங்கு அமல்படுத்த படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
மேலும் 12.7.2020 மற்றும் 19.7.2020 , 26.7.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழமையில் எந்த தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது, எனவே முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும் , கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.