நாளை முதல்…மலேசியாவின் விடுமுறை ஹாட்ஸ்பாட்டான லங்காவி தீவில் இவர்களுக்கு அனுமதி..!
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு செப்டம்பர் 16(நாளை) முதல் மலேசியாவின் விடுமுறைப் பகுதியான மிகப்பெரிய லங்காவி தீவு,மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பானது கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால்,இந்தியா உள்ளிட்ட நாடுகளைப் போன்று மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில்,மலேசியாவில் கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியிலிருந்து திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை நாடு கொண்டுவரவும், உள்நாட்டில் சிக்கிய வெளிநாட்டினரை சொந்த நாட்டுக்கு அனுப்பவும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மே மாதத்திலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இதனைத்தொடர்ந்து,உணவகங்களில் உணவருந்துதல்,மற்றும் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.அதன்பின்னர்,கொரோனா தொற்று குறைந்ததையடுத்து,பல்வேறு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,விடுமுறை கொண்டாட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான மலாக்கா ஜலசந்தியில் உள்ள 99 தீவுகளின் தொகுப்பான மிகப்பெரிய லங்காவி தீவு, செப்டம்பர் 16 முதல் முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்,மலேசியாவின் முக்கிய விடுமுறை இடத்திலுள்ள வணிகங்கள் இந்த வாரம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை வரவேற்கத் தயாராகி வருகின்றன, ஏனெனில் நாடு ஒரு பேரழிவு தரும் கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கான ஆரம்ப நடவடிக்கையை லங்காவி தற்போது எடுத்து வருகிறது.
மேலும்,கடற்கரைகள், ஜியோபார்க்ஸ், பறவை வாழ்க்கை மற்றும் பாறை அமைப்புகளுக்கு பெயர் பெற்ற லங்காவி,இந்த ஆண்டு இறுதிக்குள் 400,000 பார்வையாளர்கள் இலக்கு வைத்து, 165 மில்லியன் ரிங்கிட் (USD 39.66 மில்லியன்) வருவாய் பெற மதிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக,லங்காவி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் துவான் நசாருதீன் அப்துல் முத்தலிப் கூறுகையில்:”எங்களுக்கு அதிக எண்ணிக்கை சுற்றுலாப்பயணிகள் தேவைப்பட்டாலும் நாங்கள் இன்னும் நெரிசலை விரும்பவில்லை. முக்கிய விஷயம் என்னவென்றால்,குறைவாக இருந்தால் சுற்றுலாப் பயணிகளின் கட்டுப்பாட்டை உறுதி செய்ய முடியும்” என்று கூறினார்.
மலேசியா அதன் 32 மில்லியன் மக்களில் ஒட்டுமொத்தமாக 2 மில்லியன் கொரோனா வைரஸ் வழக்குகளையும்,20,000 க்கும் மேற்பட்ட இறப்புளையும் பதிவு செய்துள்ளது, இது ஆசியாவின் மிக உயர்ந்த தனிநபர் தொற்று விகிதங்களில் ஒன்றாகும்.எனினும்,அதன் தடுப்பூசி திட்டம் அதன் அண்டை நாடுகளை விட வேகமாக முன்னேறியுள்ளது, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.