இலங்கையில் தொடர்ந்து பதற்றம்!இன்று முதல் முகத்தை மூடி செல்ல தடை!அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு
இலங்கையில் அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மூடும் அனைத்து விஷயங்களுக்கும் இன்று முதல் தடை என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னும் இலங்கையில் பதற்றம் குறைந்தபாடு இல்லை.தொடர்ந்து பதற்றநிலையிலே உள்ளது இலங்கை.
இந்நிலையில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,இலங்கையில் அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மூடும் அனைத்து விஷயங்களுக்கும் இன்று முதல் தடை என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.