கே. ஜி. எஃப் – 2 படத்தின் ஷூட்டிங் இன்று முதல் பெங்களூரில் ஆரம்பமாகி உள்ளது.
கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தை அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் யாஷூடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஆனந்த் நாக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் சஞ்சய் தத்தின் லுக் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இன்னும் 25நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும், அதில் 2 சண்டை காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தவிர்த்து இசை பணிகள் உட்பட அனைத்து இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. சமீபத்தில் அரசாங்கம் படப்பிடிப்புக்கான அனுமதியை வழங்கியதை அடுத்து ஷூட்டிங்கை தொடங்கியுள்ள முதல் தென்னிந்திய படமாக கே. ஜி. எஃப் 2 உள்ளது. ஆம் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கவுள்ளது. இதில் கிளைமாக்ஸ் ஃபைட் காட்சியை தவிர 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…