சூரரை போற்று வெளியீட்டு தொகையிலிருந்து ரூ. 1.5கோடி பல்வேறு திரைப்பட தொழில் சங்கங்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் பேவரட்டாக மாறியுள்ளது. சமீபத்தில் சூரரை போற்று படத்தை அமேசான் பிரேமில் அக்டோபர் 30ம் தேதி வெளியிடவுள்ளதாகவும், சூரரை போற்று வெளியீட்டு தொகையில் வரும் பணத்தில் ஐந்து கோடி ரூபாயை முன்கள பணியாளர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் சூர்யா கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக வெளியீட்டு தொகையில் இருந்து ரூ. 1.5கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளார். அதில் ரூ. 80லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும், ரூ. 30 லட்சத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், ரூ. 20லட்சத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் மற்றும் ரூ. 20லட்சத்தை இயக்குநர்கள் சங்கத்திற்கும் நிதியுதவியாக வழங்கியுள்ளார். சூர்யாவின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…