பிரண்ட்ஷிப் படத்திலுள்ள பாடலுக்காக பாவடை தாவணியில் லாஸ்லியாவும் ,வேட்டி சட்டையில் ஹர்பஜன் சிங்கும் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கோடை விடுமுறைக்கு பிரண்ட்ஷிப் வரும் என்று அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா நடிக்கும் படங்களில் ஒன்று பிரண்ட்ஷிப் .ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் இந்த படத்தில் ஹர்பஜன் சிங், சதீஷ்,குக் வித் கோமாளி பாலா ,வில்லனாக அர்ஜூன் என பலர் நடிக்கின்றனர் . மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் பிரண்ட்ஷிப் என்று கூறப்படுகிறது.
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் மீண்டும் தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.அதில் லாஸ்லியா பாவாடை தாவணியிலும் , ஹர்பஜன் சிங், சதீஷ்,பாலா ஆகியோர் வேட்டி சட்டையிலும் உள்ளனர் .அந்த புகைப்படத்தை பகிர்ந்த ஹர்பஜன் சிங்,தமிழனின் தாய்மடி ,கீழடி
தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னைமடி,எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த கோடை விடுமுறைக்கு நம்ம படம் பிரண்ட்ஷிப் வருகிறது.தளபதி,தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.இதிலிருந்து படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் ,மே மாதத்தில் பிரண்ட்ஷிப் திரைப்படம் ரிலீஸாக அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.தற்போது ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…