சியான் 60 திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..??

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60 திரைப்படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி விநாயகசதுர்த்தி அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். தற்போது இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இந்த சியான் 60 திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி விநாயகசதுர்த்தி அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.