குக்மி படத்தின் 2 ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற சட்ட மன்ற தேர்தல் முடிந்த பிறகு தொடங்கவுள்ளதாக தகவல்.
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கும்கி. இந்த திரைப்படத்தை லிங்கு சாமி தயாரித்திருந்தார். இசையமைப்பாளர் டி இமான் இசையில் உருவாகியிருந்தார். யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வெற்றியைப் பெற்றது என்பதை சொல்லியே தெரிய வேண்டாம்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதனுடைய இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான படப்பிடிப்பு வருகின்ற சட்ட மன்ற தேர்தல் முடிந்த பின் வருகின்ற ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கும்கி 2 படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் 18 யானைகளை வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த இரண்டாவது பாகத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் உருவாகியுள்ள காடன் படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…