விக்ரம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது.
அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை . இந்த நிலையில் நேற்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் கமல் நடிக்கவுள்ள விக்ரம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்டர் பக்கத்தில் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆரம்பிக்கலாங்களா என்று பதிவிட்டுள்ளார். இதனால் தற்போது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளார்கள்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…