பீஸ்ட் திரைப்படத்தின் வெறித்தனமான லேட்டஸ்ட் அப்டேட்.!
செப்டம்பர் மாதம் பீஸ்ட் படக்குழு சண்டைக்காட்சிகளுக்காக ரஷ்யா செல்லவிருக்கின்றனர்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு வரும் 23 ஆம் தேதி நிறைவடைகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் படக்குழு சண்டைக்காட்சிகளுக்காக ரஷ்யா செல்லவிருக்கின்றனர்.மேலும், படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.