பிரான்ஸில் வரும் திங்கட்கிழமை முதல் ஊரடங்கை விலக்கி கொள்வதாக அந்நாட்டு பிரதமர் எட்வார்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இங்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
பிரான்சில் 174,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இவர்களில் இதுவரை 25,987 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் நேற்று மட்டுமே 178 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், பிரான்சில் வரும் திங்கள்கிழமை முதல் ஊரடங்கை விலக்கிக் கொள்ளப் போவதாக பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் தெரிவித்துள்ளார். மேலும், பாரிஸ் நகரில் தொற்று அதிகமாக உள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என கூறியுள்ளார்.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…