நீங்கள் Free WiFi பயன்படுத்துபவரா? இதை படியுங்கள்..!!
பொது இடங்களில் வெளியில் செல்லும் போது WiFi இருந்தால் அதனை பயன்படுத்துவோம், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அதனை பயன்படுத்தும் போது நமது தகவல்கள் திருடப்படலாம்.
கவனிக்க வேண்டியவை:
உங்களது ஸ்மார்ட்போனின் ஓஎஸ் அப்டேட் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும், ஓஎஸ் அப்டேட் செய்யும் போது பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் ஹேக்கர்களால் எளிதில் ஹேக் செய்ய முடியாது.
முறையான ஆன்டிவைரஸ் மென்பொருட்களை வைத்திருப்பது நல்லது.
குறிப்பாக WiFiன் வேகம் வழக்கமானதை விட குறைவாக இருந்தால் அந்த WiFi கனெக்ஷனை துண்டித்துவிடுவது நல்லது.
Free WiFi பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பொருட்கள் வாங்குவது மற்றும் வங்கித்தளங்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் .
WiFiயை பயன்படுத்தி முடித்தபின்னர் ஸ்மார்ட்போனில் உள்ள WiFi ஆப்ஷனை ஆப் செய்ய வேண்டும்.