இந்தோனேசியாவில் ஏ.டி.எம் மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி..!
வியட்நாமை தொடர்ந்து, இந்தோனேசியாவில் ஏ.டி.எம் இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி அந்நாட்டு அரசு வழங்கிவருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2.90 லட்சத்தை தாண்டிய நிலையில், 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்தோனேசியாவில் 14,741 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு அதனை தடுக்கும் முயற்சியை தீவிரமாக எடுத்து வருகிறது.
இந்நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்க பலரும் வேலையிழந்துள்ளனர். இதனால் அங்கு வாழும் வறுமை கோட்டிற்கு கிழ் உள்ளவர்கள், ஆதரவற்றோர் மற்றும் தினக்கூலிக்கு வேலைக்கு செல்வோர்களுக்கு ஏ.டி.எம் இயந்திரம் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம், இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தா மற்றும் அங்குள்ள முக்கியமான நகரில் தினமும் 1000 நபர்களுக்கு 1.5 டன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.