மாஸ் காட்டிய ஆப்பிள்.. iPhone 11 பயனர்களுக்கு இலவச டிஸ்பிளே!
2019 நவம்பர் முதல் 2020 மே வரை தயாரிக்கப்பட்ட அனைத்து ஐபோன் 11 மாடல்களுக்கு இலவசமாக டிஸ்பிளே பொருத்திதரப்படும் என ஆப்பிள் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் 11-ஐ கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோன் 11, இதுவரை இல்லாதளவு இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம், அதன் விலை. இந்நிலையில் தற்பொழுது ஆப்பிள் நிறுவனம், 2019 நவம்பர் முதல் 2020 மே வரை தயாரிக்கப்பட்ட ஐபோன் 11 மாடலை பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாக டிஸ்பிளே மாற்றித்தரப்படும் என அறிவித்துள்ளது.
ஐபோன் 11 மாடலை வாங்கியோருக்கு டச் ஸ்க்ரீனில் சில இருப்பதாக எழுந்துள்ள புகார் காரணமாக ஐபோன் 11 பயனர்களுக்கு இலவசமாக டிஸ்பிளே மாற்றி தரப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளதாகவும், அதுவும் 2019 நவம்பர் முதல் 2020 மே வரை தயாரிக்கப்பட்ட ஐபோன் 11 மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
அதற்காக ஆப்பிள் நிர்வாகம் ஒரு வலைத்தளத்தை உருவாக்கியது. அந்த வலைத்தளத்தில் உங்கள் ஐபோன் 11-னின் சீரியல் நம்பரை கொடுத்தால் மட்டுமே போதும். இலவச டிஸ்பிளே மாற்ற உங்களின் போன் தகுதி என்றால், உங்கள் அருகில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் கொடுத்து சரி செய்துகொள்ளலாம். மேலும், உங்கள் போனின் சீரியல் எண்ணை கண்டறியவேண்டுமானால், Settings > General > About-ல் சென்று பார்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, உங்களின் தகவல்களை பேக்-அப் எடுத்து வைப்பது நல்லது.