மலையாள திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் பாபுராஜ். தமிழில் ஸ்கெட்ச், ஜனா மற்றும் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியாகிய விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அதிக அளவில் பரீட்சயமாகியுள்ள இவர் மீது தற்போது கேரள மாநிலம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அருண்குமார் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தொடர்ந்து புகார் மனுவில், மூணாறில் உள்ள ரிசார்ட் ஒன்றை 2020 ஆம் ஆண்டு 40 லட்சம் அட்வான்ஸ் என்றும் 3 லட்சம் வாடகை என்று, ஒப்பந்தம் போட்டு குத்தகைக்கு எடுத்ததாகவும், அதன் பின் கொரோனா ஊடரங்கு காரணமாக பல நாட்கள் ரிசார்ட் மூடப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஊரடங்கு முடிந்து மீண்டும் திறக்க சென்ற போதும் வருவாய்த் துறையினரால் அந்த இடம் 2018-ஆம் ஆண்டே கையகப்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அதை மறைத்து தனக்கு வாடகைக்குக் கொடுத்து பாபுராஜ் மோசடி செய்து விட்டதாகவும், தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட போது தர மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது பாபுராஜ் மீது அடிமாலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…