பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வித்தியாசமான போட்டி ! ஈபில் கோபுரத்தில் அடியில் இருந்து உச்சிக்குச் செல்லும் போட்டி…..
129பேர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற ஈபில் கோபுரத்தில் அடிப்பகுதியில் இருந்து உச்சிக்குச் செல்லும் போட்டியில் கலந்துகொண்டனர். பாரீசில் உள்ள ஈபில் கோபுரம் 324மீட்டர் உயரம் கொண்டது. இந்தக் கோபுரத்தின் அடியில் இருந்து உச்சிக்குச் செல்லும் வரையில் 1665படிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோபுரத்தின் அடிப்பகுதியில் இருந்து உச்சிக்கு விரைவாக யார் செல்கிறார்கள் என்பதற்குப் போட்டி நடத்தப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகப் போட்டி நடைபெற்றது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்முறைத் தடகள வீரர்கள் உட்பட 129பேர் கலந்துகொண்டனர். ஆடவர் பிரிவில் போலந்தின் பியோதர் லோபோத்சின்ஸ்கி முதலிடம் பிடித்தார். மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் சூசி வல்சாம் விரைவாக உச்சியை அடைந்து முதலிடம் பெற்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.