இயல்பு நிலைக்கு திரும்பும் பிரான்ஸ் – ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு!
பிரான்சில் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்துள்ளதால், அங்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தற்பொழுது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா பரவல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பதாக அதிகமாக தான் இருந்தது. ஆனால், தற்போது பிரான்சில் முன்பை விட குறைவாக குறைந்துள்ளது. அங்குள்ள மக்களில் 30 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரான்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே பிரான்ஸ் நாட்டில் உள்ள மக்கள் தற்பொழுது பழைய நிலைக்கு திரும்பி சுதந்திரமாக சாலைகளில் நடமாடி வருகின்றனர்.
அங்கு திரையரங்குகள், உணவு விடுதிகள், அத்தியாவசிய பொருட்கள் அல்லது இதர கடைகள் என அனைத்து கடைகளும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இத்தனை நாட்கள் வீட்டில் அடைந்திருந்ததற்கு பதிலாக தற்பொழுது வெளியில் சென்று மகிழ்ச்சியுடன் உலா வருகின்றனர். தளர்வுகளும் சுதந்திரமாக நடமாட அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தாலும் திரையரங்குகளில் கூட 35 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே முந்தியவர்கள் படம் பார்க்க பிந்தியவர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனராம்.