கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம் விதித்த பிரான்ஸ்..!
கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம் விதித்துள்ளது பிரான்ஸ் போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு.
பிரபல தேடுதல் வலைத்தளமான கூகுள் நிறுவன தளத்தில் பிரான்ஸ் ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை பயன்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அபராதம் கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதில் கூகுள் நிறுவனத்திற்கு 50 கோடி யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில், ரூ.4,400 கோடி ஆகும். மேலும், கூகுள் நிறுவனம் செய்திகளை சேகரிக்கும் ஊடகங்களுக்கு எவ்வித வகையில் இழப்பீடு வழங்க உள்ளது என்பது குறித்த செயல்திட்டம் 2 மாதங்களுக்கு வெளியிட வேண்டும்.
இவ்வாறு ஒழுங்காற்று அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதனை செய்வதற்கு தவறினால் நாள் ஒன்றுக்கு 9 லட்சம் யூரோ அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில், கிட்டத்தட்ட ரூ.79 கோடி ஆகும்.