பிரான்ஸ் கலவரத்தில் 4 பேர் பலி.. அவசரநிலை பிரகடனம்.!

France Declares Emergency I

சென்னை: பிரான்ஸின் நியூ கலிடோனியாவில் நடந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அவசரநிலையை பிறப்பித்தது அந்நாட்டு அரசாங்கம்.

பாரிஸில் நேற்றைய தினம் புதியதாக ஏற்றப்பட்ட மசோதாவுக்கு எதிராக கலவரம் வெடித்தது. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கலவரத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது, கனக் என்ற இளம் பழங்குடியினரை சேர்ந்த மூன்று பேரும், ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, பசிபிக் தீவான நியூ கலிடோனியாவில் இன்று அவசரகால உத்தரவை பிறப்பித்தது பிரான்ஸ் அரசு. அதன்படி, இன்று காலை 5 மணிக்கு (1800 GMT) அமலுக்கு வந்த இந்த அவசரகாலச் சட்டம், பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட தீவில் மக்கள் கூட்டமாக நடமாடுவதைத் தடுப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி, நியூ கலிடோனியாவில் குறைந்தது 12 நாட்களுக்கு அவசரகால நிலை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தலைநகரில் ஏற்கனவே பள்ளிகள் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவில் உள்ளது. இதனால், அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்