பிரான்ஸ் பனிச்சறுக்கு வீரர் பனிச்சரிவில் சிக்கி உயிர்தப்பிய காட்சிகள்!
பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த வீரர், பனிச்சரிவில் சிக்கி உயிர்தப்பிய காட்சிகள் பிரான்சில் வெளியாகியுள்ளன. லெபனானைச் சேர்ந்த தாமஸ் க்ராய் ((Thomas Kray)) ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிபடர்ந்த பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டது.
பனிக்கட்டிகளிடையே மூழ்கிய தாமஸ், முன்னெச்சரிக்கையாக அணிந்திருந்த ஏர் பேக்கின் உதவியால் பாதிப்பின்றி உயிர் தப்பினார். பனிக்கட்டிகளுக்குள் சிக்கியபோது, தண்ணீருக்குள் இருந்ததுபோல உணர்ந்ததாக தாமஸ் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.