வெள்ளத்தால் அவதிப்படும் நிலைமாறி தேங்கிய வெள்ளத்தில் விளையாடும் வினோதமான இளைஞர்கள்…..
தேங்கிய வெள்ளத்தில் ஃபிரான்சில் தெருக்களில் இளைஞர்கள் நீர்ச்சறுக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் மழையின் காரணமாக செய்னே நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர் மட்டம் உயர்ந்து அருகிலுள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தண்ணீர் தேங்கியுள்ளது.
அங்கிருந்தவர்கள் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும், தெருக்களில் தேங்கிய நீரில் கயிற்றால் வேகமாக இழுக்கப்பட்டு நீர்ச்சறுக்கு விளையாடுவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.