பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகை!
4 நாள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வரும் 9ம் தேதி இந்தியா வருகிறார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது. வரும் 9ம் தேதி தனது மனைவி ப்ரிக்ட்டே மரி கிளைடே (Brigitte Marie-Claude உடன் இந்தியா வரும் மேக்ரன், 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். பொருளாதாரம், சர்வதேச அரசியல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மகாராஷ்ட்ராவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலைய திட்டமான ஜெய்தாபூர் அணுமின் நிலையம் குறித்த ஒப்பந்தம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, சர்வதேச சூரிய ஒளி மின் உற்பத்திக்கான கூட்டமைப்பின் மாநாட்டில் இம்மானுவேல் மேக்ரன் கலந்து கொள்கிறார். பிரான்ஸ் அதிபரான பிறகு முதன்முறையாக இம்மானுவேல் மேக்ரன் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.