இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த நான்கு அணிகள் மோதல் !

Default Image

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில்  உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது .

மற்றொரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 6 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்திய அணி நான்கு போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது அதனால் புள்ளி பட்டியலில் 7 புள்ளிகள் பெற்ற  நான்காம் இடத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஒரு புள்ளிகள் கூட எடுக்காமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
நியூஸிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது .அதனால் புள்ளி பட்டியலில் 9 புள்ளிகள் பெற்ற இரண்டாம் இடத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி 5 போட்டிகளில் ஒரு போட்டியில்  வெற்றி பெற்ற 3 போட்டியில் தோல்வி தழுவியது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. இதனால் புள்ளிப் பட்டியலில் மூன்று புள்ளிகள் பெற்று 7-ம் இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்