ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகள் – ஜோ பைடன் ட்வீட்
தனது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்று அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் முதல் காலநிலை மாற்றம், இன நீதி வரை நமது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. அடுத்தாண்டு சீக்கிரம் வரட்டும், வீணடிக்க நேரம் இருக்காது. அதனால்தான் நானும் எனது அணியும் முதல் நாளில் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம் என்று பைடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காலவரையறை சவால்களை சமாளிக்க தனது குழு கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி டிரம்ப் டிரில்லியன் டாலர் கொரோனா வைரஸ் நிவாரணம் மற்றும் அரசாங்க செலவு மசோதாவில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார் என்று அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பை கைவிடுவதாக பைடன் குற்றம் சாட்டியதோடு, நிலுவையில் உள்ள கொரோனா நிவாரண மசோதாவில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தாக கூறப்படுகிறது.
மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நிவாரண மசோதாவில் கையெழுத்திட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்ததால், அவர்களால் முடிவெடுக்க முடியுமா என்று தெரியவில்லை என்று பைடன் கூறினார் என்று ஒரு அறிக்கையில் வெளியானது. இரு கட்சிகளின் உறுப்பினர்களும் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் கையெழுத்திடுமாறு டிரம்பை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக, அமெரிக்க காங்கிரசில் இரு கட்சி ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
From COVID-19 and the economy to climate change and racial justice — our nation is facing four historic crises at once. And come January, there will be no time to waste. That’s why my team and I are hard at work preparing to take action on day one.
— Joe Biden (@JoeBiden) December 27, 2020