ஈரானின் முன்னாள் துணை அதிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.!

Default Image

ரகசிய தகவல்களை வெளிநாட்டினருக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் துணை அதிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தெஹ்ரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரானின் முன்னாள் துணை அதிபரான ஷாகிந்தோக்ட் மொலவர்டிக்கு தெஹ்ரான் நீதிமன்றம் தேசிய பாதுகாப்பை சீர்க்குலைக்கும் நோக்கம் கொண்டவர் என்று கூறி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரானின் அதிபரான ஹசன் ரொஹானின் துணை அதிபராக பணியாற்றியவர் ஷாகிந்தோக்ட் மொலவர்டி. நான்கு ஆண்டுகளாக பெண்களின் உரிமைக்காக போராடிய இவர் ஓய்வு பெறுவதற்கு முன் சிவில் உரிமைகளுக்கான சிறப்பு உதவியாளராகவும் பணியாற்றினார்.

இவர் இரகசிய தகவல்களையும், ஆவணங்களையும் வெளிநாட்டினருக்கு வழங்கியதாக கூறி குற்றச்சாட்டப்பட்ட இவருக்கு சனிக்கிழமையன்று தெஹ்ரான் நீதிமன்றம் தேசிய பாதுகாப்பை சீர்க்குலைக்கும் நோக்கில் இரகசிய தகவல்களை வழங்கிய ஷாகிந்தோக்ட் மொலவர்டிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

தற்போது ஷாகிந்தோக்ட் மொலவர்டி தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளதாக ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்