இலங்கை குண்டுவெடிப்பு.! முன்னாள் பிரதமர் நேரில் ஆஜராகி வாக்குமூலம்.!

கடந்தாண்டு இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை குழுவினர் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் அருகில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர்.
இந்த கோர தாக்குதலில் 258 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள இலங்கை அரசால் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அந்த விசாரணை குழுவானது தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அப்போது பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை குழுவினர் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அப்போதைய கல்வி அமைச்சரும் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான அகிலவிராஜ் அவர்களிடமும் விசாரணை குழுவினர் வாக்குமூலம் பெற்றனர்.