வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளும் வங்காளதேச முன்னாள் பிரதமர்!
வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா.
கலிதா ஜியா வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் ஆவார். இவர் 2 ஊழல் வழக்குகளில் சிக்கிய நிலையில், இவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2018-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல், தொடர்ந்து 25 மாதங்கள் சிறையில் இருந்தார்.
பின் சிறையில் இருந்த கலிதா ஜியாவுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மனிதாபிமான அடிப்படையில் கடந்த மார்ச் 25-ந்தேதி அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட இவருக்கு, வீட்டிலிருந்தவாறே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலிதா ஜியாவுக்கு நீரிழிவு, கை கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ள நிலையில், இவரை வாரம் ஒருமுறை மருத்துவர்கள், இவரது வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், இவர் நீண்ட காலம் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.