யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மாடல் ஆமி டோரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக இருந்து வரும் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தான் முன்னாள் மாடல் அழகியான ஆமி டோரிஸ் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனியார் பத்திரிக்கையின் நேர்காணலில் கலந்துகொண்டார்.
அப்பொழுது அவர் கூறுகையில்,1997 -ஆம் நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.அங்குள்ள விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.டிரம்ப் தன்னை முத்தமிட்டார் என்றும் முழுவதுமாக நான் ட்ரம்பின் பிடியில் இருந்தேன் என்றும் என்னால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றபோது தனக்கு 24 வயது என்றும் டிரம்பிற்கு 51 வயது என்றும் ஆமி டோரிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் டோரிஸின் இந்த குற்றச்சாட்டுகளை டிரம்பின் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர்.அதாவது ,ஊடகத்தில் வெளியாகியுள்ள ஆமி டோரிஸ் கூறியது நம்பமுடியாதது என்று தெரிவித்துள்ளனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…