#BigBreaking:அதிர்ச்சி…ரத்தப்போக்கு;சற்று முன் ஜப்பான் முன்னாள் பிரதமர் சுடப்பட்டார்!

Default Image

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் உரையாற்றும் போது,அவர் மார்பில் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும்,இது தொடர்பாக, ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK கூறுகையில்:”முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தனது உரையின் போது மார்பில் சுடப்பட்டு கீழே விழுந்தார்.சம்பவ இடத்தில் இருந்த NHK நிருபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தத்தைக் கேட்டார்.மேலும் அபே மீது இரத்தப்போக்கை அவர் கண்டார்”,என்று தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,ஷின்சோ அபே மார்பின் மீது குண்டு பாய்ந்து, கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுயநினைவை இழந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இதனால்,ஆபத்தான நிலையில் உள்ள முன்னாள் பிரதமர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.இதனையடுத்து,ஷின்சோ அபேவை கொல்ல முயன்ற நபரை கைது காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்