தமிழ் படத்தில் ஹீரோவாக களமிறங்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!
- தமிழில் ட்விட்டுகளை மட்டும் பதிவிட்ட ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
- ஹர்பஜன் சிங் Friendship என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று மகிழ்ச்சியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக தோனி தலைமையில் சென்னை அணியில் விளையாடி வருகிறார். அதனால் ஹர்பஜன் சிங் அவ்வப்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட்டுகளை போட்டு அசத்தி வருகிறார். இந்நிலையில், வரும் மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் தொடங்கவுள்ளது. அப்போது அவரது தமிழ் ட்விட்டுகளை எதிர்க்கலாம். இதனிடையே தமிழில் ட்விட்டுகளை மட்டும் பதிவிட்ட ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம்,இணைய தொடர்.இன்று #SeantoaStudio #CinemaaStudio தயாரிக்கும் #FriendShip படத்தின் நாயகன்.#தமிழ் மக்களுக்கு நன்றி.திருக்குறள் டூ திரைப்பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் #தலைவர் #தல #தளபதி சின்னாளப்பட்டி சரவணன்-@ImSaravanan_P அசத்துவோம் @JPRJOHN1 pic.twitter.com/Z5pePt7R72
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 2, 2020
இந்நிலையில், ஹர்பஜன் சிங் Friendship என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று மகிழ்ச்சியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இணையத் தொடரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாவதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், இதை சாத்தியப்படுத்திய தமிழக மக்களுக்கு செஞ்சார்ந்த நன்றியையும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். பின்னர் அவருக்கு உறுதுணையாக இருந்த திண்டுகல்லைச் சேர்ந்த சின்னாளப்பட்டி சரவணனுக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.