தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம் இன்று …!

Default Image

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1894 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிறந்தவர் தான் எம்.பக்தவத்சலம். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர். பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்ட இவர் அமராவதி சிறையில் பல இன்னல்களையும் அனுபவித்துள்ளார். 1963ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற இவர், தனது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தி உள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத் திட்டங்களை தொடங்கலாம் எனும் சட்டத் திருத்தத்தையும் கொண்டுவந்தார். மேலும் 1960 ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு சென்று வந்த, இன்னும் ஐந்தாண்டு திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் நாட்டு மக்களுக்கு கூறியவர்.

விடுதலைப் போராட்ட வீரராக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த இவர், மனித நேய உணர்வுடனும், மனிதாபிமான உணர்வுடன் வாழ்ந்தவர். இவர் 1987 ஆம் ஆண்டு தனது 89 வது வயதில் மறைந்தார். இவரது நினைவாக தமிழ்நாடு அரசு சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்துள்ளது. மேலும் அங்கு அவரது மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது பிறந்ததினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்