அமேசான் மழைக்காடு- காடுகளே நாட்டின் பலம்.! மரங்கள் அழிவது மனித இனம் அழிவதற்கு சமம்.! எச்சரித்தச் சுற்றுசூழல் ஆய்வாளர்கள்..!

Default Image

பிரேசில்: உலகில் மிக பெரிய பரப்பளவும் , அடர்த்திலும் கொண்ட அமேசான் காடுகளில் பல வகையான உயிரினங்கள் இருக்கின்றனர் மற்றும் அதிக அளவில் மூலிகை பொருட்களும் அமைந்துள்ள இடமாகும்.
அமேசான் காடுகள் அழிவது அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரேசில் அதிபர் பொலசொனாரோவுக்கும் இடையே வாக்குவாதமானது.
இந்நிலையில் அமேசான் காடுகளின் அழிப்பு சதவீதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பிரேசிலில் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் அமேசான் காடுகளின் நிலையை  குறித்து சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில் கடந்த ஜூலை மாதத்துக்கு முன் 12 மாதங்களில் 10100 சதுர கி.மீ. பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 43% சதவீதம் அதிகம் என்பதாகும். அதே போன்று 2017-லில் ஆகஸ்ட் முதல் 2018 ஜூலை வரை 7033 சதுர அடி அழிக்கப்பட்டன. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம்.
காடுகளை காப்பாற்ற அரசு எந்தவித முயற்ச்சியும் எடுக்கவில்லை, என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். காடுகளே நாட்டின் பலம். மரங்கள் அழிவது மனித இனம் அழிவதற்கு சமம். உடனடியாக காடுகளை காப்பாற்றவும் சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்பு டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்