கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி..!
ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பிறகு உலக நாடுகளில் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றது. இந்நிலையில் பல்வேறு உலக நாடுகள் தங்கள் நாட்டுக்குள் பயணிக்க கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது, மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களை அனுமதிப்பது போன்ற விதிமுறைகளை பின்பற்றி வருகிறது.
அதுபோல தற்போது ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளதாவது, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்தும், இரண்டு தவணை செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நாட்டுக்குள் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.