ஆன்லைன் முறைக்கு மாறும் பல்கலைக்கழக மாணவர்களின் விசா ரத்தை எதிர்த்து அங்குள்ள கோர்ட்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்துக்கும் அதிகமானார் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கல்லூரிககள், பள்ளிகள் திறக்கமுடியாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளன.
இதைத்தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம், இலையுதிர் காலத்துக்கு அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்தப்போவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புக்கு மாறும் பல்கலைக் கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வருகிற வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் 4 பங்கில் 3 பங்கு மாணவர்கள் ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக இந்தியர்கள் 26 %பேரும் , சீனர்கள் 48 %பேரும் அடங்குவர். இந்நிலையில், ஆன்லைன் முறைக்கு மாறும் பல்கலைக்கழக மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகமும், எம்.ஐ.டி. என்று அழைக்கப்படுகிற மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனமும் பாஸ்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்குகளைதொடர்ந்துள்ளன.
இந்த வழக்குகளில், டிரம்ப் நிர்வாக விசா முடிவுக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு அல்லது நிரந்தர தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன. விசாரணையின் போது விசா ரத்து அறிவிப்புக்கு தடை விதிக்கப்படுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்பது தெரியவரும்.
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…