“பார்த்தவை மறந்து போகலாம்”.! நெற்றிக்கண் TitleTrack வெளியீடு.!
நெற்றிக்கண் திரைப்படத்தில் இடம்பெற்ற “பார்த்தவை மறந்து போகலாம்” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா, அண்ணாத்த, நெற்றிக்கண், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் கடந்த 2017- ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த நெற்றிக்கண் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர், டிரைலர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது என்ற கூறலாம். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலான “பார்த்தவை மறந்து போகலாம்” என்ற பாடல் தற்போது வெளியீடபட்டுள்ளது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில், பூர்வி பாடியுள்ளார். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதோ அந்த பாடல்.
#Netrikann Title track is out now!! Let us know what you think about it –https://t.co/ZNAqDj6vK7
Composer – @ggirishh
Lyricist – @VigneshShivN
Singer – @poorvikoutish9@DisneyPlusHS #DisneyPlusHotstarMultiplex— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) August 5, 2021