அமெரிக்காவில் இருந்து வைத்தால் கட்டாயம் 14 நாட்கள் தனிமை- இங்கிலாந்து அரசு அறிவிப்பு!
இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்நாட்டில் 3,13,483 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 43,995 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமுலில் உள்ளது.
மேலும் அங்கு கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் காரணத்தினால், அங்கிருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இங்கிலாந்து போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர், அமெரிக்கா கொரோனா பரவதொடங்கிய சமயமே இங்கிலாந்தில் இருந்து வந்த விமானங்களைத் தடைசெய்தது. இந்நிலையில் அங்கு விமான போக்குவரத்தை தடை விதித்தது, கொரோனா பரவலை தவிர்க்க உதவவில்லை எனவும் தெரிவித்தார்.