மார்ச் 24 முதல் ஏப்ரல் 13 வரை கொலம்பியா முழுவதும் கட்டாய தனிமைப்படுத்தல்.!
கொரோனா வைரசை கட்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தல், ஊரடங்கு என பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவும் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அதிபர் இவான் கியூரிக், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றும்போது கூறுகையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை கொலம்பியாவில் குடிமக்களாகிய நாம் அனைவரும் தடுப்பு முறைகளைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும், என்று கொலம்பியா அதிபர் அறிவித்தார்.
கொலம்பியாவில் இதுவரை 158 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.