உலகில் முதல் முறையாக ஒட்டகங்களுக்கு போக்குவரத்து ட்ராபிக் சிக்னலை சீன அரசு டன்ஹூவாங் நகரில் அமைத்துள்ளது.
சீனாவின்,டன்ஹுவாங் நகரில் உள்ள பாலைவனத்தின் மிங்ஷா மலைப்பகுதி பிரபலமான சுற்றுலாதளமாக இருந்து வருகிறது.மேலும் இது “சிங்கிங் சாங்(பாட்டுப்பாடும் மலை)” மலை என்றும் அழைக்கப்படுகிறது.ஏனெனில்,சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் நடந்து செல்லும்போது அல்லது மணலிலிருந்து சறுக்கும்போது பாடல் பாடுவது போன்று ஒரு விதமான சத்தம் ஏற்படும்.இத்தகைய காரணத்தினாலும்,மேலும், இங்கு ஒட்டகச்சவாரி செய்வதற்காகவும் மக்கள் அதிகமாக வருகின்றனர்.எனவே,இப்பகுதியில் போக்குவரத்து தொடர்பான சில விதிமுறைகளை தற்போது சீன அரசு அறிமுகப்படுத்தியுள்ளது,
அதனடிப்படையில்,மிங்ஷா மலைப்பகுதியில் ஒட்டகங்களுக்கான ட்ராபிக் சிக்னலை சீன அரசு அமைத்துள்ளது.உலகில் ஒட்டகங்களுக்கென்று ட்ராபிக் சிக்னல் அமைப்பது இதுவே முதல் முறையாகும்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒட்டகங்கள் இருவருக்கும் உதவும் வகையில் இந்த ட்ராபிக் சிக்னல் உள்ளன. சிக்னலில் பச்சை நிறம் காட்டினால் ஒட்டகங்கள் சாலையைக் கடக்க வேண்டும்,அதே சமயம், சிக்னல் சிவப்பு நிறமாக மாறும்போது சுற்றுலாப் பயணிகள் சாலையைக் கடக்க வேண்டும்.இதனால் சுற்றுலாப் பயணிகள் ஒட்டக சவாரி செய்யும்போது பாதுகாப்பாகவும் இருக்க முடியும், மேலும் சாலை பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என சீன அரசு கூறியதாக, சீனாவின் செய்தி ஊடகமான சி.என்.என்(CNN) தெரிவித்துள்ளன.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…