உலகிலேயே முதல் முறையாக…இலக்கை அழிக்க லேசர் ஆயுதம் – இஸ்ரேல் சோதனை வெற்றி!

Default Image

உலகிலேயே முதல் முறையாக ஏவுகணைகள்,ராக்கெட்டுகள்,டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற பல வகையான வான்வழி பொருட்களை இடைமறித்து அழிக்க கூடிய புதிய லேசர் ஏவுகணை-தற்காப்பு அமைப்பு ‘இரும்பு கற்றை'(அயர்ன் பீமை) இஸ்ரேல் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

பொதுவாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே இது போன்று பார்த்திருப்போம்.ஆனால்,தற்போது நிஜத்திலும் அவை சாத்தியமாகியுள்ளன.அதன்படி,ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் உருவாக்கிய இந்த அயர்ன் பீம் இயக்கிய-ஆற்றல் ஆயுத அமைப்பைப்(directed-energy weapon system) பயன்படுத்தி வான்வழி பாதுகாப்பு அமைப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் கூறுகையில்: “இஸ்ரேல் புதிய “இரும்பு கற்றை” லேசர் இடைமறிப்பு முறையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.இது உலகின் முதல் ஆற்றல் அடிப்படையிலான ஆயுத அமைப்பு ஆகும்.

இது லேசரைப் பயன்படுத்தி உள்வரும் யுஏவிகள்,ராக்கெட்டுகள் மற்றும் மோட்டார்களை செலவில் சுட்டு வீழ்த்த உதவும்.ஒரு ஷாட்டுக்கு 3.50 டாலர் மட்டுமே செலவு ஆகும்.இது அறிவியல் புனைகதை போல் தோன்றலாம்,ஆனால் இது உண்மையானது” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்