உலககோப்பையில் முதல் முறையாக தொடக்க வீரர்கள் இருவருமே பூஜ்ஜியம் !
நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு .
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 291 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டை 286 ரன்கள் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் ,கொலின் மன்ரோ இருவரும் களமிறங்கினர்.முதல் ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் ஷெல்டன் கோட்ரெல் வீசினார்.
அவர் வீசிய முதல் பந்திலே மார்ட்டின் குப்டில் அவுட் ஆனார்.அதன் பின்னர் அதே ஓவரில் 5-வது பந்தில் கொலின் மன்ரோ அவுட் ஆனார்.இருவருமே ஒரு பந்தில் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவரை விளையாடிய உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் இருவருமே ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனது இதுவே முதல் முறையாகும்.