அமெரிக்கா வரலாற்றிலேயே முதன்முறையாக ஜோ பைடன் நிர்வாகத்தில், அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று உலக நாடுகள் முழுவதும் ஆண்கள், பெண்களைப் போலவே மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்கா வரலாற்றிலேயே முதன்முறையாக ஜோ பைடன் நிர்வாகத்தில், அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்துக்கு குடியரசுக் கட்சியினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் மசோதா செனட் சபையில் புதன்கிழமை என்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இவர் 52 க்கு 48 என்ற ஆதரவு வாக்குகள் வித்தியாசத்தில் துறை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரேச்சல் லெவின் இதற்கு முன்பதாக பென்சில்வேனியாவின் சுகாதார செயலாளராக இருந்துள்ளார். மாநில மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது துணை சுகாதார செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் முதல் லத்தீன் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…