சீனாவில் முதல் முறையாக கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் இல்லை.!
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது முதல் சீனாவை கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது.
பின்னர் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் ,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் சீனா வைரசைக்கட்டுப்படுத்த திணறியது.
பிறகு சீனாமேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் கொரோனா வைரஸை அங்கு கட்டுக்குள் கொண்டுவந்தனர். கடந்த சில நாட்களாகவே உள்ளூரில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சீனா கூறியது.
இந்நிலையில் சீனாவில் நேற்று கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என சீனா அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி முதல் சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.