40 ஆண்டுகளில் முதல் முறையாக…இன்று அவசரமாக கூடுகிறது ஐ.நா. பொதுசபை கூட்டம்!
உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்பாக இன்று ஐ.நா.வின் பொதுசபை அவசரமாக கூடுகிறது.
உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதனிடையே,ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான தடைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,உக்ரைனில் ரஷ்யா பிடிக்கும் இடங்கள் அங்கீகரிக்கப்படாது என ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில்,உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்பாக இன்று ஐ.நா.வின் பொதுசபை அவசரமாக கூடுகிறது .40 ஆண்டுகளில் முதல் முறையாக ஐக்கிய நாடுகளின் பொதுசபையின் அவசரக்கூட்டம் நியூயார்க்கில் இன்று நடைபெறுகிறது.
முன்னதாக நடைபெற்ற அவசர கூட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 11 நாடுகள் ஆதரவு தந்த நிலையில் ரஷ்யா அதை எதிர்த்தது.
மேலும்,பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மற்ற 3 நாடுகளான இந்தியா,சீனா,ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.இந்த சூழலில்,உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்பாக இன்று ஐ.நா.வின் பொதுசபை அவசரமாக கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.