10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 6 வகை டைனோசர்களின் கால்தடம் கண்டுபிடிப்பு..!
இங்கிலாந்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 6 வகை டைனோசர்களின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கென்ட் நகரில் டைனோசர்களை பற்றி ஆய்வுப்பணியில் பேராசிரியர் டேவிட் மார்டில் ஈடுப்பட்டு வந்துள்ளார். முதல் முறையாக அந்த நகரின் ஃபோல்க்ஸ்டோன் பகுதியில் 6 வகையான டைனோசர் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிவித்த அவர், 10 கோடி ஆண்டுகளுக்கு முன் பல்வேறு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருப்பதாக அந்த காலடித்தடங்கள் காட்டுவதாக கூறியுள்ளார்.
அதில், 3 விரல்களை கொண்ட அசைவ உண்ணிகளான டைனோசர்கள், கவச உடை தோற்றம் உடைய டைனோசர், பறவைகளின் தோற்றம் உடைய சைவ உண்ணி டைனோசர்கள், ஆர்னித்தோபோடிக்னஸ் வகை உடைய டைனோசர்கள், சிறிய காலடி தடங்கள் உடைய டைனோசர்கள், 2 அல்லது 4 கால்களால் நடக்கும் டைனோசர்கள் என பலவகையான டைனோசர்களின் கால்தடங்கள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இவை புலம் பெயர்தலுக்கோ அல்லது உணவுக்காகவோ இப்படி ஒன்றாக வந்திருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.