FIFA World Cup 2018:இன்று முத்தான மூன்று போட்டிகள்!
இன்றைய தினம் உலககோப்பை கால்பந்து போட்டியில் 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளது .
இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை ஆஸ்திரேலியா அணி எதிர் கொள்ள உள்ளது. ரஷ்யாவின் கஷன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 77 சதவீதம் பிரான்ஸ் வெல்ல வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். முன்னாள் உலக சாம்பியனான பிரான்ஸ் அணி இந்த போட்டியில் எளிதில் வென்று விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஐஸ்லாந்து அணி அர்ஜெண்டினா அணியை எதிர்கொள்கிறது. உலகின் தலைசிறந்த ஆட்டகாரர்களில் ஒருவரான மெஸ்சி இந்த போட்டியில் விளையாடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அர்ஜென்டினா பலம் வாய்ந்த அணி என்பதால் அதற்கு ஐஸ்லாந்து ஈடு கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதில் 73 சதவீதம் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இரவு 9.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் பெரு மற்றும் டென்மார்க் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. மொர்டோவியா மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் பெரு அணியின் வெற்றிக்கான வாய்ப்பு 30 சதவீதம் உள்ளதாகவும், டென்மார்க் அணியின் வெற்றிக்கான வாய்ப்பு 39 சதவீதம் உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.