சர்க்கரை நோய் பெண்களுக்கு வராமல் இருக்க எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்..!
மீன்: கொழுப்பு நிறைந்த மீன்கள் சாப்பிடுவது நன்மை தரும். குறிப்பாக சால்மன், கெளுத்தி, மத்தி, சூரை மற்றும் நெத்திலி போன்ற மீன்களில் கொழுப்பு அதிகம் உள்ளது. மேலும் இதில் டிஹெச்ஏ மற்றும் இபிஏ போன்ற சத்து அதிகம் காணப்படுகிறது.
இஞ்சி: இஞ்சியில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் இது உங்கள் உணவில் இருக்க வேண்டிய ஒன்று. இதில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் இருக்கிறது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
மஞ்சள்: மஞ்சள் ஆயுர்வேத குணங்கள் நிறைந்தது. இது கண்டிப்பாக தினசரி உணவில் இருக்க வேண்டிய ஒரு பொருள். இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது உட்பட சில பாதிப்புகளுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், கணையத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
கீரை மற்றும் பச்சை காய்கறிகள்: இவைகளில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரிகள், எளிதில் ஜீரணிக்கக்கூடிய நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்கும் தன்மை இதில் காணப்படும்.
வால்நட்: வால்நட் மிகவும் சத்தான ஒன்று. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்த சிறந்த நட்ஸ் வகைகளில் வால்நட் ஒன்றாகும். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். தீங்கு விளைவிக்கும் கொழுப்பின் அளவை இது குறைக்கும். அதனால் இதயத்தை இது பாதுகாக்கும்.