சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 6 பழங்கள் இதோ..!
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த நிலையில் மிக முக்கிய ஹார்மோனான இன்சுலின் தனது உற்பத்தியை குறைத்து கொள்ளும். உடலுக்கு தேவைப்படுகின்ற முக்கிய ஹார்மோன்களில் இன்சுலினும் ஒன்றும்.
இந்த பாதிப்பு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உள்ளது. சர்க்கரை நோயாளிகள் ஒரு சில உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிட்டு விட கூடாது. மீறி சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்ந்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். இத்தகைய பாதிப்பை தர கூடிய அன்றாட உணவுகள் என்னென்ன, என்பதை இனி பார்ப்போம்.
உலர் திராட்சை
உலர்ந்த வகை பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது என ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் உலர் திராட்சை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு உடனே கூடி விடுமாம். ஏனெனில் 1 கப் உலர் திராட்சையில் 115 கிராம் அளவிற்கு சர்க்கரை கார்போஹைட்ரெட் உள்ளதாம். இது நேரடியாக சர்க்கரையாக மாறி விடுமாம்.
சப்போட்டா
சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் கூட சப்போட்டாவை சாப்பிட கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். ஏனெனில், இதன் இனிப்பு சுவை சர்க்கரையின் அளவை உடலில் அதிகரிக்க கூடுமாம்.
கொழுப்பு உள்ள பால்
கொழுப்பு நீக்கப் படாத பசும்பாலை சர்க்கரை நோயாளிகள் குடித்து வந்தால் இன்சுலின் உற்பத்தியை மேலும் தடை செய்து விடுமாம். எனவே, எப்போதும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை தேர்தெடுத்து குடிக்கவும். இல்லையேல் பின் விளைவுகள் அதிகம்.
உருளைக்கிழங்கு
எதற்கெடுத்தாலும் பலரின் வீடுகளில் உருளைக்கிழங்கை பிரதான உணவாக சமைத்து விடுவர். எவ்வளவு தான் சுவையாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை எடுத்து கொள்ள வேண்டாம். இவற்றில் உள்ள கார்ப்ஸ் நேரடியக சர்க்கரையின் அளவை உயர்த்துமாம்.
மாம்பழம்
சுவைமிக்க பழமான மாம்பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் இதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் அதிக சர்க்கரை அளவு உள்ளதாம்.
பழச்சாறுகள்
பழங்களை ஜுஸ் போல தயாரித்து குடித்தாலும் அவற்றில் உள்ள ப்ருக்டோஸின் அளவு குறைவதில்லை. இந்த மூல பொருள் உடனே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கூட்டி விடும். ஆதலால் சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுள் குடிப்பதை தவிர்க்க்கவும்.