வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், 2025 வரை குறைவாக உணவு உண்ண வேண்டும் என அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக வட கொரியா நாடு பிற நாடுகளுடன் எல்லைக்கு சீல் வைத்து கொண்டது. மேலும், உணவுப் பொருட்கள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் வடகொரியா மூடியது. இதனால் வட கொரியாவில் உணவுப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ வாழைப்பழம் இந்திய மதிப்பில் 3,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எனவே வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தற்பொழுது வட கொரியாவில் உள்ள நிலையைப் பொறுத்தவரை, குளிர்காலத்தினை கூட கடக்க முடியாத அளவுக்கு கடுமையான உணவு பஞ்சம் இருப்பதாகவும், இந்நிலையில் எப்படி 2025 வரை குறைவாக உண்ண முடியும் எனவும் நாட்டு மக்கள் தங்கள் தவிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் : மாவட்டம், வாணியம்பாடி அருகே கொத்தகோட்டையில் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை அரசு பேருந்து ஓட்டுநர் ஏற்றாமல் சென்ற சம்பவம்…
சென்னை : கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை…
சென்னை : தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் தொடர்பான காரசார விவாதமானது நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 4-வது போட்டி மார்ச் 25-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அந்தந்த…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையில் உலக காச நோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது.…