Food : நீங்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்ணா..? அப்ப கண்டிப்பா இதை சாப்பிடுங்க..!

Published by
லீனா

குழந்தை பெற்ற பெண்கள் குறைந்தது, குழந்தைக்கு 1 வயது வரையாவது தாய்ப்பால் கொடுப்பதுண்டு. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்ப்பால் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று.

ஆனால், இன்று சிலர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தங்களது அழகை கெடுப்பதாக கருதுகின்றனர். மேலும், சிலருக்கு குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பால் இருப்பதில்லை. இதற்கு காரணம் நமது உடலில் உள்ள சத்து குறைபாடு தான். தற்போது இந்த பதிவில் குழந்தைக்கு தாய்ப்பால் சுரக்க என்ன சாப்பிட வேண்டும் என்றும், பால் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றியும் பார்ப்போம்.

பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் 

தாய்ப்பாலில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளது.  தாய்ப்பால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தஉதவுவதோடு, இது குழந்தையை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதால், தாய்க்கு மனஅழுத்த பிரச்சனைகள் ஏற்படாது. தாய்க்கு உடல்நல பாதுகாப்பை வழங்குகிறது. அதன்படி, புற்றுநோய்கள், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பை அளிக்கிறது.

தாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள் (Food) : 

தாய்ப்பால் சுரக்க, பால் கொடுக்கும் பெண்கள் புரதம் நிறைந்த உணவுகளான முட்டை, பால், பருப்பு வகைகள், இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காரோட்டினாய்டுகள் தாய்ப்பால் உற்பத்தியை பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதன்படி, காரோட்டினாய்டுகள் நிறைந்த உணவுகளான காய்கறிகள், பழங்கள் மற்றும் சில வகையான கீரைகள்  ஆகியவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.  லக்டோஜென் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. எனவே லக்டோஜென் நிறைந்த உணவுகளான பால், தயிர் மற்றும் சீஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க  தினமும் 2,500-3,000 கலோரிகள் உட்கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுக்க வேண்டும். போதுமான தூக்கம் அவசியமானது.

Published by
லீனா

Recent Posts

பெண்ணிடம் இப்படியா நடப்பது? சர்ச்சையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.!

பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

24 minutes ago

விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…

1 hour ago

கடந்த 5 வருஷமா இப்படி தான்..லேட்டாவா இறங்குவீங்க? தோனியை விமர்சித்த சேவாக்!

சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…

1 hour ago

“ஈரான் மீது குண்டு வீசுவோம்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்.!

ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…

1 hour ago

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…

2 hours ago

இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு..அமைச்சர் சேகர் பாபு தகவல்!

சென்னை :  விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…

3 hours ago